ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் நாளை முன்னிலையாகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே, ஹரின் பெர்ணான்டோ அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஹரின் பெர்ணான்டோவிற்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து அழைப்பாணை வந்துள்ளதாகவும், அதனால், அவர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.