Our Feeds


Sunday, April 18, 2021

www.shortnews.lk

முஸ்லிம் என்ற பேரில் ஸஹ்ரான் என்ற குண்டுதாரியை யார்தான் ரிமோட் ஊடாக இயக்கினார்களோ தெரியாது - அதாவுல்லாஹ் MP

 



(ஹஸ்பர் ஏ ஹலீம்)


இனவாதம் பேசுவதை நிறுத்தி விட்டு தேசியவாதம் பேச ஆரம்பிப்போம் என தேசிய காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் தெரிவித்தார். கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றுகையில், முஸ்லிம் என்ற பேரில் ஸஹ்ரான் என்ற குண்டுதாரியை யார்தான் ரிமோட் ஊடாக இயக்கினார்களோ தெரியாது. இந்த விவகாரம் இன்று சர்வதேசம் முழுதும் பரவலாக பேசப்படுகிறது. முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இந்த நாட்டில் பகைமை இல்லை அது போன்று முஸ்லிம்களுக்கும் தமிழ், சிங்களவர்களுக்கும் பகைமை இல்லை.

இவ்வானதொரு நிலையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் குழப்பியடித்து இனவஞ்சமும் வர்மத்தையும் தோற்றுவிக்க சிலர் முயற்சிக்கிறார்கள். இதற்கான மருந்துகளை கட்டவே தேசிய காங்கிரஸும் உள்ளது.

வெளிநாட்டு அழுத்தங்கள் இல்லாமல் யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் மாகாண சபை தேர்தலை விரும்பவில்லை. நமகக்கான காணி கல்வி கலாசார மொழி உரிமைகள் போன்ற அதிகாரங்களையே வேண்டி நிற்கிறோம். அரசு 3/2 பெரும்பான்மை பெற்றது மாகாண சபை தேர்தலை நடத்த அல்ல நாட்டு மக்கள் வாழ்வதற்கான ஒரு யாப்பை உருவாக்கி அதனை எப்படி பாவிப்பது பற்றியே பேசப்பட வேண்டும்.

கடந்த ஐக்கிய தேசிய கட்சி அரசின் போது நல்லாட்சியில் மாகாண சட்டமூலத்தை நான்கு மணி நேரத்துக்குள் நிறைவேற்றி ரிசாத் ஹக்கீம் போன்றவர்கள் பெண் பிரதிநிதித்துவம் அதிகரிப்பு என்ற கெசட்டை கொண்டு வந்தார்கள் அது சிறுபான்மைக்கு பாதிப்பு என நாங்கள் கூறினோம்

வெளிநாட்டு வங்குரோத்து கபளீகரத்திலிருந்து இலங்கை விடுபட வேண்டும். ஐரோப்பா போன்ற நாடுகள் உட்பட இலங்கையை சுற்றியுள்ள நாடுகளும் நம் தேசத்தையே வேண்டும் என கூறுகிறார்கள். “யானை சண்டை பிடிக்க தகரப் பத்தைகள் அடிபடுவதுபோல் இலங்கை அடிபட முடியாது” வெளிநாட்டின் கோரப்பிடியிலிருந்து இலங்கை பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் உள்ளவர்கள் தேசப்பற்றுள்ளவர்களாகவும் தேசியவாதிகளாகவும் நாட்டின் பங்காளிகளாக மாற வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »