உடுதும்பர மற்றும் அயகம ஆகிய பகுதிகளில் கடனட்டை (Credit Card) கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உடுதும்பர பகுதியில் கொள்ளையிடப்பட்ட கடனட்டையிலிருந்து 825,000 ரூபா பணத்தையும், அயகம பகுதியில் கொள்ளையிடப்பட்ட கடனட்டையிலிருந்து சுமார் 4 லட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடனட்டையுடன், இரகசிய இலக்கம் வைக்கப்பட்டிருந்தமையினாலேயே, கொள்ளையர்கள் இலகுவாக பணத்தை கொள்ளையிட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதன்படி, கடனட்டைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
அதேவேளை, கடனட்டையுடன், இரகசிய இலக்கத்தை வைக்க வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.