கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கின்ற பின்னணியில், தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும் என கொவிட் – 19 வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது.
நாட்டில் தற்போது பரவி வரும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
கொவிட் தொற்றாளர்கள் ஏதேனும் ஒரு பகுதியில் அதிகரிப்பார்களாயின், அந்த பகுதி முழுமையாக முடக்கப்படும் என அவர் கூறுகின்றார்.
கொவிட் – 19 தடுப்புக்கான செயற்பாட்டு மையத்தினாலேயே, தனிமைப்படுத்தல் தொடர்பிலான தீர்மானங்களை எட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எனினும், எதிர்வரும் காலங்களில் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். (Citizen)