Our Feeds


Sunday, April 4, 2021

www.shortnews.lk

காடழிப்பு, ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை சட்டவிரோதமாக குடியேற்ற முயற்சி - இம்ரான் மஹ்ரூப் களத்தில்

 



கிண்ணியா பிரதேச செயலக எல்லைக்கு உட்பட்ட ஆயிலடி, மஜீத் நகர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட செம்பிமோட்ட்டை இரட்டைக்குளம், சுண்டியாறு, புளியங்குளத்தை அண்டிய பிரதேசம், வாழைமடு போன்ற பிரதேசங்களில் கிண்ணியா பிரதேச மக்கள் 50 வருடங்களுக்கு மேலாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

1980 களில் ஏற்பட்ட யுத்தநிலையினால் தமது விவசாய காணிகளை கைவிட்டு வந்த இம்மக்கள் படிப்படியாக தமது காணிகளில் குடியேறி விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் இந்நேரத்தில் 


கடந்த வாரம்  இந்த பிரதேசத்துக்கு எந்தவகையிலும் சம்மந்தமில்லாத  ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் சில பௌத்த தேரர்களின் தலைமையில் கனரக வாகனங்கள், டோசர்களை பயன்படுத்தி காடுகளை அழித்து கூடாரங்களை அமைத்து குடியேற முயற்சித்த வேளை அவ்விடத்தில் பதற்றமான சூழ்நிலை எற்பட்டுள்ளது. 


பின்னர் அவ்விடத்துக்கு வந்த முப்படையினர் வனவிலங்கு அதிகாரிகள் தலையீட்டால் அவர்கள் கலைந்து சென்றாலும் மீண்டும் வருவார்கள் என்ற அச்சநிலை மக்களிடத்தில் நிலவுகிறது. 


இந்நிலை தொடர்பாக ஆராய நான் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு நேரடியாக விஜயம் செய்து பின்னர் இந்த இடத்துக்கு கிண்ணியா பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினரையும் அழைத்து இந்த சட்டவிரோத குடியேற்ற முயற்சி சம்மந்தமாக அவ்விடத்தில் மாவட்ட செயலாருடன் தொலைபேசி மூலம் உரையாடி இதை நிரந்தரமாக தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கிண்ணியாவில் எல்லையை அடையாளப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 


இது தொடர்பாக தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்போம்.









Subscribe to this Blog via Email :
Previous
Next Post »