எவ்விதமான காரணங்களுமின்றி தன்னை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது தன்னுடைய அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் எனத் தெரிவித்து, மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலி அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவரது சட்டத்தரணியான கௌரி சங்கர் தவராசாவினால் இந்த மனு, உயர்நீதிமன்றத்தில் நேற்று (05) தாக்கல் செய்யப்பட்டது.
தடுப்புக்காவலிலிருந்து தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.