இந்தியாவில் கொரோனா பரவல் பயங்கர வேகமெடுத்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
தலை நகர் டெல்லியல் வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் இன்றியும், இடங்கள் இன்றியும் கொரோனா தொற்றாளர்கள் அவதிப்படுவதுடன் கொத்துக் கொத்தாக மரணிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் பல மாநிலங்களிலும் முஸ்லிம்கள் தமது பள்ளிவாயல்களை கொரோனா மருத்துவமனைகளாக மாற்றிக் கொடுத்து நோயாளர்களுக்கு உதவி வருகின்றார்கள்.
இந்தியப் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலேயே பல பள்ளிகள் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளன. 2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருக்கும் போது ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்ட நிலையில்.
அவற்றையெல்லாம் மறப்போம். மண்ணிப்போம். என்ற நிலையெடுத்து தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றில் மனித நேயம் காக்கும் உன்னத பணியை முஸ்லிம்கள் பள்ளிகளை மருத்துவமனைகளாக மாற்றி மேற்கொள்கிறார்கள்.