Our Feeds


Thursday, April 22, 2021

www.shortnews.lk

கைலாசா நாட்டுக்குள் இந்தியர்களுக்கு அனுமதியில்லை - ஜனாதிபதி நித்யானந்தா அறிவிப்பு ?

 



கொரோனா நோய்த்தொற்று பரவலின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரம் அடைந்திருப்பதால் இந்தியாவிலிருந்து கைலாசா வரும் பக்தர்களுக்குத் தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக, நித்தியானந்தா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.


பாலியல் புகார், ஆள் கடத்தல் வழக்குகள் எனப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிப் பிரபலமானவர் நித்தியானந்தா. சமீபத்தில், கைலாசா என்ற பெயரில் தனித் தீவு ஒன்றை உருவாக்கி, அதற்கென தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அனைத்தையும் அறிவித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியிருந்தார். மேலும், கைலாசாவில் வியாபாரம் செய்வதற்கான வழிவகைகளையும் அறிவித்திருந்தார். அதைப் பார்த்து கைலாசாவில் ஹோட்டல், டீக்கடை எனத் தொழில் செய்து பிழைக்க பலர் நித்தியானந்தாவுக்கு விண்ணப்பங்கள் அனுப்பியிருந்தனர்.


இது ஒருபுறமிருப்பினும் இன்றுவரை இந்த கைலாசா எங்கே இருக்கிறது என்பது புதிராகவே இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் அருகாமையிலுள்ள தனித் தீவு ஒன்றை நித்தியானந்தா சொந்தமாக வாங்கி `கைலாசவாக' மாற்றியிருக்கிறார் என்று பேசப்பட்டுவருகிறது. 




கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்திவருகிறார். சமீபகாலமாக அவர் திருப்பதி 'ஏழுமலையான்' வேடத்தில் வெளியிட்ட சர்ச்சைப் புகைப்படங்கள் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகின. அதன் அதிர்வலைகள் அடங்குவதற்குள் தற்போது இந்தியர்களுக்கு கைலாசாவில் 'நோ என்ட்ரி...' என்று அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.


நேற்று முன்தினம் (19.04.2021), நித்தியானந்தாவின் கைலாசா நிர்வாகத்தின் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதில், ``கொரோனா நோய்த்தொற்றின் பரவல் பல நாடுகளில் தீவிரமடைந்திருப்பதால், கைலாசா நாட்டுக்கு இந்தியா, ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என நோய்ப் பரவல் மிகுதியாக உள்ள நாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.


கைலாசாவில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டிருக்கும் அனைவரும் இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.


அறிவிப்பு என்னவோ சீரியஸாக இருந்தாலும், சமூக வலைதளங்களில் 'ஆளே இல்லாத டீக்கடையில யாருக்குடா டீ ஆத்துறார்' என்று நகைப்புக்குரியதாகவே பார்க்கப்படுகிறது.


இத்துடன் விளையாட்டுச் செய்திகள் முடிவடைகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »