மிக நீண்ட நாட்களாக வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதியான சந்தன குருசிங்ஹ, களனி பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான துறையில் பட்டத்திற்கு உரித்துடையவராகியுள்ளார்.
சிறைச்சாலைக்குள் இருந்தவாறே, கல்வி பயின்று, சமூக விஞ்ஞான துறையில் பட்டம் பெற்ற இரண்டாவது நபராக இவர் விளங்குகின்றார்.
மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரான இந்திக்க பமுனுசிங்ஹ என்ற நபரே, சிறைச்சாலைக்குள் இருந்தவாறே இதே துறையில் முதலாவது பட்டத்தை பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் சந்தன ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த பட்டத்தை பெற்றுக்கொள்ள, எதிர்வரும் சில தினங்களில் களனி பல்கலைக்கழகத்தில் இவர் பதிவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அறிய முடிகின்றது.