தூய்மையான பிராந்தியத்தை நோக்கிய இலக்கில் திண்மக்கழிவு முகாமைத்துவம் தெடர்பில் அக்குரணை பிரதேச சபை அதி கூடிய கரிசனை செலுத்தி வருகிறது. இது மிகவும் சாதகமாக நடைபெற்று வரும் அதேவேளை அதன் அடுத்த கட்டமாக பிளாஸ்டிக் கழிவுகளை மீள் சுழற்சிக்கு உற்படுத்தும் புதிய செயற்திட்டம்.
மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் (PET) போத்தல்களை இடுவதற்குரிய தொட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அந்த தொட்டிகளை நிறுவுவதற்கான வேலைத்திட்டம் அண்மையில் அக்குறணை நகரில் நடைபெற்றது.
மேலும் இந்தப் பணியினை வலுவூட்டும் ரீதியில் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுத்தீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அக்குறணை பிரதேச சபையுன் இணைந்து அக்குறணை ஜப்பான் சங்கத்தினால், அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை போடுவதற்குரிய நான்கு தொட்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.
நேற்றைய தினம் அக்குரணை பிரதேச சபையில் நடைபெற்ற நிகழ்வில் அக்குரணை ஜப்பான் சங்கத்தின் அங்கத்தவர்களினால் அந்த தொட்டிகள் உத்தியோகபூர்வமாக பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அக்குரணை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான முபீத் ஆப்தீன், அஸ்மீர் அலி, இஸ்வி, ஹஜ்ஜி மொஹிதீன் ஆகியோரும் அக்குறணை ஜப்பான் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
ஒரு பிளாஸ்டிக் போத்தல் உக்கலடைய எடுக்கும் காலம் அன்னளவாக 450 வருடங்கள். அந்த பிளாஸ்டிக் போத்தலை இந்தத்
தொட்டியில் போடுவதின் ஊடாக இவ்வழகிய உலகினை எதிர்கால சந்ததிகளுக்காக பாதுகாக்கும் பணியில் ஒன்றிணைவோம்.