Our Feeds


Sunday, April 25, 2021

www.shortnews.lk

தற்போது பரவிவரும் கொரோனா - அறிகுறிகள் தெரியும் முன்பே நியுமோனியா ஏற்படும்.

 



இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தொற்றியதன் பின்னர், நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே, நியூமோனியா நிலைமை ஏற்படும் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


காற்றின் மூலம் பரவும் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கட்டாயம் முகக் கவசங்களை அணியுமாறும் சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்படி, புதிய வீரியம் கொண்ட புதிய கொரோனா வைரஸ், முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை போன்றே, மிகவும் வேகமாக பரவி வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வைரஸ்களை விடவும், இந்த முறை அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடியது.

புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரிடமிருந்து, அந்த வைரஸ் சுற்று சூழலில் பரவும் பட்சத்தில், அது சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை அதே இடத்தில் காணப்படும்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே இதனைத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பரவிய வைரஸ் காரணமாக ஒருவருக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதன் பின்னரே நுரையீரல் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

எனினும், தற்போது பரவும் புதிய வகை கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே, அவருக்கு நியூமோனியா ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு, இந்த வைரஸ் தொற்றானது குறைந்த வயதுடையவர்களையும் இலகுவில் தாக்கக்கூடிய தன்மை கொண்டது எனவும் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »