குளியாபிட்டி நகர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குளியாபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, குளியாபிட்டி நகர் எல்லை, கஹதுல்ல, பஹல வீரஒவ, சேனாதிகம மற்றும் துன்மோதர ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையிலேயே, இந்த பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளாக குளியாபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலைமை மேலும் வலுவடையுமாக இருந்தால், கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிடுகின்றது.