ஸ்மார்ட் போன்களை அதிகமாக பயன்படுத்துவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஸ்மார்ட்போனிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் புற்றுநோய் மற்றும் பிற நோய்களை ஏற்படுத்தக்கூடியது என அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த குடும்ப சுகாதார பணியகத்தின் வாழ்க்கை முறை மற்றும் உளவியல் ஆலோசகர் வைத்தியர் லசந்த விஜேசேகர,
"ஒரு ஸ்மார்ட்போன் மூலம் வெளிப்படும் மின்காந்த அலைகள் நீண்ட நாள் நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நோய்கள் என்ன? குறிப்பாக மூளை தொடர்பான நோய்கள், மார்பக புற்றுநோய், ஆண்மை குறைவு ஏற்படுத்தல், குழந்தைகளில் கவனம் குறைதல், சமூகப் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். அதனால்தான் நாம் ஸ்மார்ட்போன்கள் பயன்பாட்டை மட்டுப்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.