Our Feeds


Tuesday, April 13, 2021

www.shortnews.lk

அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற முறையில் காரின் ஜன்னலில் அமர்ந்து சென்ற விவகாரம்: கைதான நால்வர் அக்குறணையைச் சேர்ந்தவர்கள்!

 



(செ.தேன்மொழி)


அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பற்ற வகையில் காரின் ஜன்னலில் அமர்ந்து பயணிகள் பயணித்த விவகாரம் தொடர்பில் நான்கு இளைஞர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த சனிக்கிழமை அதிகாலை பாதுகாப்பற்ற முறையில் கார் ஒன்று பயணிக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

இதன்போது காரில் செல்லும் பயணிகள் காரின் ஜன்னலில் அமர்ந்து செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த விடயம் தொடர்பில் அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பொலிஸ் பிரவினர் விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட காரைச் செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் நேற்று (12) பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நீதிவான் அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் காரின் ஆரம்ப உரிமையாளர் மற்றும் அதை அவரிடமிருந்து , பெற்றுக் கொண்ட நபர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

மேலும் காரின் ஜன்னலில் அமர்ந்து செல்லும் இளைஞர்களை அடையாளம் கண்ட பொலிஸார் அவர்களை கைது செய்யதுள்ளனர். அக்குறணை பகுதியைச் சேர்ந்த 18-20 வயதுக்கு இடைப்பட்டவர்களை அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மோட்டார் வாகன சட்டவிதிகளுக்கு புறம்மாக செயற்பட்டுள்ளதுடன், ஏனையவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பாதுப்பை ஏற்படுத்தும் வகையிலிம் பயணித்துள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிவேக நெடுஞ்சாலை பாதுகாப்பு பொலிஸ் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »