தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பல்கலைக்கழகங்க கல்வி நடவடிக்கைகளை மேலும் இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழங்கள் திறக்கப்படாது எனவும் பல்லைக்கழகங்கள் ஆரம்பிக்கப்படும் தினம் தொடர்பிலான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்தார்.