முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
ரஞ்ஜன் ராமநாயக்கவின் நிலைமையை கருத்திற் கொண்டு அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த கோரிக்கையை எழுத்துமூலம் தனக்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி கூறியதாக சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்