Our Feeds


Thursday, April 22, 2021

www.shortnews.lk

கொரோனா அதிகரிப்பு - திருமண மற்றும் இறுதிச் சடங்குகளின் போது முன்னர் செயல்படுத்திய சுகாதார வழிமுறை செயல்படுத்தப்படும் - அமைச்சர்

 



இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் சாத்தியங்கள் உருவாகியுள்ளதன் காரணமாக திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளக்கூடியவர்களின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.


அதன்படி, திருமண நிகழ்வுகள் மற்றும் இறுதி சடங்குகள் உள்ளிட்ட அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் முன்னர் செயல்படுத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை மீண்டும் அமுல்படுத்தப்படும் என ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »