குருநாகல் − வாரியபொல பகுதியின் நிராவிய மற்றும் நிக்கதழுபொத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, குருநாகல் − குளியாபிட்டி பொலிஸ் பிரிவு இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.