Our Feeds


Tuesday, April 6, 2021

www.shortnews.lk

ஜமாஅத்தே இஸ்லாமி & ஜமாஅத்தே இஸ்லாமி மாணவர் அமைப்புக்கு தடை - பொது பல சேனாவுக்கு தடையில்லை - அமைச்சரவை உப குழு அறிக்கை

 



இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமியின் மாணவர் அமைப்பை தடை செய்ய வேண்டுமெனவும், ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கையிலேயே இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் பொது பல சேனாவை தடை செய்ய வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் பொது பல சேனாவை தடை செய்யக் கூடாது என ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு தெரிவித்துள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »