தடை செய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகளின் உறுப்பினர்கள் தொடர்பில் எடுக்கவுள்ள அடுத்த கட்ட செயல்பாடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், புலனாய்வு தகவல்களை அடிப்படையாக வைத்தே UTJ, CTJ, ACTJ, SLTJ மற்றும் சுப்பர் முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும் தடை செய்தோம். புலனாய்வு தகவல்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்திலும் மேலும் சில அமைப்புகள் தடை செய்யப்படலாம்.
இந்த அமைப்புகளை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு மத்தியில் பெண்கள் அமைப்புகள் இருக்கிறது. இவர்கள் நல்ல பல பணிகளை மேற்கொள்கிறார்கள். சமூக பணிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். மனிதர்களுக்கு உதவிகளை வழங்கிருக்கிறார்கள். இது போன்ற பல பணிகளையும் செய்திருக்கிறார்கள்.
இது போன்ற இயக்கத்தவர்கள் முழுமையாக தடை செய்யப்பட்டவர்களாக கருதப்படமாட்டார்கள்.
அந்த அமைப்புகள் கொண்டிருந்து பிரதான கொள்கையை அடிப்படையாக கொண்டே தடை செய்யப்பட்டன.
இவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதை ஆராய்கிறோம். அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளிடமிருந்து பணம் வந்திருந்தால் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. இவர்களுடன் தொடர்பான நூற்றுக் கணக்கான பள்ளிகள் இருக்கின்றன. அவற்றையும் வக்பு சபையின் கீழ் கொண்டு வருவோம்.
அந்த அமைப்புகளின் உறுப்பினர்கள் தேவையில்லாம் அச்சப்படத் தேவையில்லை.