மியன்மாரின் போகோ நகரில் ஒரேநாளில் 82 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளூர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை மியன்மாரில் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி இராணுவப் புரட்சி இடம்பெற்ற பின்னர் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 700 ஐ கடந்துள்ளது.
யாங்கூனுக்கு அருகிலுள்ள பாகோ நகரில் சனிக்கிழமை (10) ஆர்ப்பாட்டக்காரர்கள் 82 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்னர்.
மேற்படி சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் எனும் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
‘இது ஒரு இன அழிப்பு போன்றது. அவர்கள் ஒவ்வொரு நிழலையும் சுடுகின்றனர்’ என ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் யே ஹ்துத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மியன்மாரில் இதுவரை உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 701 ஆக அதிகரித்துள்ளது என அரசியல் கைதிகளுக்கான உதவிச் சங்கம் உறுதிபப்டுத்தியுள்ளது.
எனினும், 248 பேரே கொல்லப்பட்டுள்ளனர் என மியன்மார் இராணுவத்தின் பேச்சாளர் ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.