நேற்றைய தினம் பதிவான 578 கொரோனா நோயாளர்களில் 171 பேர் குருநாகல் மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் 100 பேர் குருநாகல்-கனேவத்த பிரதேசத்திலும் 59 பேர் குளியாபிடிய பிரதேசத்தில் இருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக புத்தளம் மாவட்டத்தில் இருந்து 51 நோயாளர்களும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இருந்து 43 கொரோனா நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.