Our Feeds


Sunday, April 18, 2021

www.shortnews.lk

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக் எதிராக 50 பக்க ஆவணக்கோவை கையளிப்பு!

 



சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா குறித்து 50 பக்க ஆவணக்கோவை தயாரிக்கப்பட்டு,  அந்த ஆவணம் பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது ஜெனரல் ஷவேந்திர சில்வா 58 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அதன்போது வாழ்வுரிமை மீறல் உள்ளடங்கலாக பல்வேறு மனித உரிமை மீறல்களில் அவரது பங்கு தொடர்பில் இந்த புதிய ஆவணத்தில் விபரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வலயங்கள் எனக்கூறப்பட்ட இடங்களில் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் உணவுக்காக வரிசையில் நின்றவர்கள் மீதான எறிகணை, குண்டுத்தாக்குதல்களில் உயர்தப்பியவர்களின் நேரடி சாட்சிகள் மூலம் இவை தயாரிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பலர் தற்போது பிரிட்டனில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களம் 2020 ஆம் ஆண்டில் போரின் முடிவில் இடம்பெற்ற மீறல்களில் ஷவேந்திர சில்வாவின் வகிபாகத்துக்கான அவரைக் கடுமையாகக் கண்டனம் செய்தது. மீறல்களை முழுமையாக அங்கீகரித்தல் மற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கல் என்பன மிகவும் முக்கியமானவையாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »