பாகிஸ்தான், கத்தார், குவைத் மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து இஸ்லாமிய போதகர்கள் நுழைவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
இந்நாடுகளிலிருந்து கடந்த காலங்களில் விரிவுரையாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்த 32 இஸ்லாமிய அமைப்புகள் குறித்து அரசாங்க புலனாய்வு பிரிவினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக திவயின சிங்கள பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
2005 முதல் 2019 வரை 1,800 இஸ்லாமிய பிரச்சாரகர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ததாக அரசாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. உளவுத்துறை வட்டாரங்களின்படி, சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக பேருவலை, அக்கரைபற்று, காத்தான்குடி, மாதம்பை மற்றும் மூத்தூர் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தனர். என தெரிவிக்கப்பட்டுள்ளது.