இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 103,558 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 478 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இது நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை 12,589,067 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 165,101 ஆகவும் உயர்த்தியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை காலை தெரிவித்துள்ளது.
இதனிடையே நேற்யை தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 52,847 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,82,136 ஆக உள்ளதுடன், சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் 7,41,830 ஆக காணப்படுகிறது.
2020 பெப்ரவரி ஆரம்பத்திலிருந்து ஒரே நாளில் அதிகளவான கொரோனா நோயாளர்களின் நேற்றைய தினம் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
30 மில்லியனுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளர்களை கொண்ட அமெரிக்காவுக்கும் சுமார் 13 மில்லியன் கொரோனா நோயாளர்களை கொண்ட பிரேஸிலுக்கும் அடுத்தபடியாக இந்தியா உள்ளது.