நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகள் (?) எனக்கூறி பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே நேற்று பாராளுமன்றில் சில யோசனைகளை முன்வைத்துள்ளார்.
இதன்படி, வெளிநாட்டு ஏற்றுமதியை இலக்காக கொண்டு, இலங்கையில் கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கான அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை முன்வைக்கின்றார்.
தேயிலை பொருளாதாரத்தை போன்று, இலங்கையில் ”நைட் எக்கநோமி” (இரவு பொருளாதாரம்) இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.
இதன்படி, மதுபானசாலைகளை முற்பகல் 10 மணி முதல் இரவு 10 மணி வரை திறப்பதற்கான யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார்.
அதேபோன்று, மதுபான விநியோகம் காணப்படுகின்ற உணவகங்களில், மது அருந்துவதற்காக வழங்கப்பட்டுள்ள நேரத்தை அதிகாலை 1 மணி வரை நீடிக்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
சுற்றுலாத்துறையை இலக்காக கொண்டே இந்த யோசனைகளை தான் முன்வைப்பதாகவும் டயானா கமகே தெரிவிக்கின்றார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் கூறுகின்றார்.