களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதி இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
இதேவேளை, கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இதுவரை 4 பகுதிகள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி பொலிஸ் பிரிவு, தித்தவெல்கம மற்றும் நீராவிய , நிகடலுபொத்த ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.