இலங்கையில் வஹாப்வாதத்தை தடை செய்ய வேண்டும் என உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி விசாரனை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்திருந்த பரிந்துரைக்கு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகளின் பரிந்துரைகளை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் அனைத்து தவ்ஹீத் அமைப்புகளையும் தடை செய்வதைப் பற்றி ஆராய வேண்டும் எனவும் அமைச்சரவை உபகுழு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கையிலேயே இது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.