Our Feeds


Wednesday, April 21, 2021

www.shortnews.lk

04/21 தாக்குதல் விசாரனைகளில் முன்னேற்றமில்லை - குற்றவாளிகளை மண்ணிக்க தயார் - கர்தினால் மல்கம் ரஞ்சித்

 



ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தயார் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவிக்கின்றார்.


ஈஸ்டர் தாக்குதலின் ஈராண்டு நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தாம் சூத்திரதாரிகளுக்கு மன்னிப்பு வழங்க தயார் என்ற போதிலும், குறித்த குற்றத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் யார் என்பதே பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் கூறுகின்றார்.

ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் மற்றும் தற்போதுள்ள அரசாங்கம் ஆகியன நடந்திய விசாரணைகளில் முன்னேற்றம் கிடையாது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »