Our Feeds


Friday, April 16, 2021

www.shortnews.lk

உலகம் முழுவதும் 03 மில்லியன் பேர் கொரோனாவில் பலி.

 



கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3 ஆம் இடத்திலும் உள்ளது.


உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4 வது இடத்தில் நீடிக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 38,045 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதை அடுத்து அங்கு கொரோனா வைரஸால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51 இலட்சத்து 87 ஆயிரத்து 879 ஆக உள்ளது.

ஒரே நாளில் 296 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரஸூக்கு பலியானோர் எண்ணிக்கை 100,073 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 40 இலட்சத்தை கடந்துள்ளது. சுமார் 10.79 இலட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகில் 3 மில்லியனை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் உலகில் இதுவரை பாதிக்கப்பட்டோர் - 139,722,618
கொரோனாவால் உலகில் இதுவரை உயிரிழந்தோர் - 3,000,366
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் - 118,773,505

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »