பொருளும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் லொக்டவுனை இல்லாமலாக்குங்கள் நாங்களே உழைத்து சாப்பிட்டுக் கொள்கின்றோம் எனக் கூறி இன்று (06) கொழும்பு மோதரை பகுதி தொடர்மாடி குடியிருப்பு வாசிகள் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தார்கள்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் போடப்பட்டுள்ள லொக்டவுன் காரணமாக பொருளாதார ரீதியில் தாம் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளமையினால் லொக்டவுனை நீக்கி தொழில் செய்வதற்கு வழி செய்யுமாறு கோரியே இந்த ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.