கொரோனாவில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி கோரி முஸ்லிம் MP க்கள் சிலர் இன்று (02) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா உடல்களை எரிக்காது அடக்கம் செய்ய வலியுறுத்தி உயர் நீதி மன்றில் தொடுக்கப்பட்ட மனுக்களை நேற்று (01) உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக சிங்கள மொழி இணையதள செய்திச் சேவையொன்று தகவல் வெளியிட்டுள்ளது.