(யாக்கூப் பஹாத்)
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபராக கடமை புரியும் ஜனாப் MHM. அபூபக்கர் அவர்கள் இலங்கை அதிபர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலை பட்டதாரியானா இவர் பட்ட பின் கல்வி டிப்ளோமா , ஆங்கில பாட நெறி டிப்ளோமா போன்ற பாட நெறிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.
கமு/அல்- அஷ்றக் தேசிய பாடசாலையில் 1988-12-23 ஆம் திகதி பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்ட இவர் 2012-10-03 ஆம் திகதி இலங்கை அதிபர் சேவையின் 2ஆம் தரத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். மேலும் கமு/அல்- அஷ்றக் தேசிய பாடசாலையில் 2015-08-30 திகதி வரை உதவி அதிபராக கடமையாற்றினார்.பின்னர் 2015-09-01ஆம் திகதி தொடக்கம் தற்பொழுது வரை கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பிரதி அதிபராக ( Deputy principal ) ஆக கடமை ஆற்றி வருகின்றார்.
தனது 33 வருட சேவையை 28 வருடங்கள் நிந்தவூர் அல்- அஷ்றக் தேசிய பாடசாலையிலும், மிகுதி 5 வருடங்களை கல்முனை ஸாஹிராக் கல்லூரியிலும் பூர்த்தி செய்த இவர் ஒரு சிறந்த ஆளுமை கொண்ட அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.