Our Feeds


Saturday, December 5, 2020

www.shortnews.lk

மஹர சிறை கலவரத்தில் இறந்த கொரோனா தொற்றாளர்களை எரிப்பதில் சட்ட சிக்கல்

 



மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரழந்தவர்களை அடக்கம் செய்வதில் சட்ட சிக்கல் இருப்பதாக நீதிமன்ற வைத்திய அதிகாரி வத்தளை நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். 


அண்மையில் மஹர சிறையில் இடம்பெற்ற கலவரத்தில் 11 பேர் பலியாகிய நிலையில் அவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


பலியானவர்களை தகனம் செய்தால் எதிர்காலத்தில் பிரேத பரிசோதனை நடவடிக்கைகளுக்காக  பூதவுடல் தேவைப்படால் சிக்கல் நிலை உருவாகும் என சிறைக்கைதிகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சங்கம் நீதிமன்றுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.


இதனை அடுத்து மஹர சிறைச்சாலை கலவரத்தில் உயிரழந்தவர்களை எரியூட்டுதா அல்லது அடக்கம் செய்வதா என்பது தொடர்பில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »