புதிதாக நியமிக்கப்பட்ட சிறை மேலாண்மை மற்றும் கைதிகளின் மறுவாழ்வு அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்கள் இன்று மஹர சிறை வளாகத்தை பார்வையிட சென்றார் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பிலேயே அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டார்.
கைதிகளினால் சேதமாக்கப்பட்ட சிறைச்சாலையின் அனைத்து பகுதிகளையும் புணரமைக்குமாறு அமைச்சர் இதன் போது சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதுடன், சிறையிலுள்ள அனைத்து கைதிகளுக்கும் விரைவில் அன்டிஜென் பரிசோதனை நடத்துமாறும் உத்தரவிட்டார்.
சிறைக் கைதிகளையும் இதன் போது சந்தித்த அமைச்சர் அவர்கள் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் விசாரித்தார்.