Our Feeds


Sunday, December 6, 2020

www.shortnews.lk

இறந்த கைதிகளின் உடல்களை எரிப்பதா? புதைப்பதா? தடுமாறும் அரசு

 



மஹர சிறை கலவரத்தில் கொரோனா தொற்றிய நிலையில் உயிரிழந்த கைதிகளின் உடலை எரிப்பதா? புதைப்பதா? என்பது பற்றிய தீர்மானம் அடுத்த வாரம் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


மஹர சம்பவத்தில் உயிரிழந்த கைதிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்த நிலையிலேயே அவர்களை எரிப்பதா? புதைப்பதா? என்ற பிரச்சினை உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில் நீதி மன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு செயல்படுவது சிறந்தது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீதி மன்ற தீர்ப்பு எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »