(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரை தகனம் செய்ய வேண்டும் என அறிவித்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்காமல் உயர் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.
இந்நிலையில் சடலங்கள் தொடர்ச்சியாக எரிக்கப்படும் விவகாரத்தில், அதனை தடுப்பதற்கு எடுக்க முடியுமான அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பில் சட்ட வல்லுநர்கள் கூடி ஆராய்ந்து வருகின்றனர்.
நேற்றைய தினம் இது தொடர்பில் உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அடுத்த கட்டம் தொடர்பில் விரைவாக தீர்மானம் எடுக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முஸ்லிம் சட்ட வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.