கடலரிப்பு காரணமாக சாய்ந்தமருது, மாளிகைக்காடு முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜனாஸாக்கள் வெளியேற்றப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாளிகைக்காடு மையவாடியின் தடுப்புச் சுவர் உடைந்துள்ள நிலையில் அதனை சரிசெய்து மையவாடியை பாதுகாக்குமாறு பல கோரிக்கைகள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அரிப்பின் கோரம் அதிகரித்துள்ளமையினால் இந்நிலை தோன்றியுள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுப்பார்களா?