கொரோனா தொற்றை நீக்கும் வகையில் கேகல்லவில் அமைந்துள்ள ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள ஆயுர்வேத மருந்தை பரிசோதிக்கும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று பங்கெடுத்தார்.
பரிசோதனை நிமித்தம் சில நோயாளிகளுக்கு இம்மருந்து வழங்கப்பட்ட நிலையில் அதில் சாதகமான விளைவுகள் தென்பட்ட காரணத்தினால் அரசு இதன் பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.