இன்று இந்நாட்டில் ஜனநாயக ரீதியிலான ஒர் ஆட்சி நடைபெறுகிறதா என்ற ஒரு கேள்வி உள்ளது. கொவிட் 19 இன் தாக்கம் இன்று நாட்டில் அதிகரித்துள்ளது.எதிர்க் கட்சி என்ற அடிப்படையில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் முற் கூட்டியே பல் வேறு தடவைகள் முன்னாயத்தம் தொடர்பாக கூறியிருந்தார். அரசாங்கம் அதனைப் பொருட்படுத்த வில்லை. மக்களைப் பணயம் வைத்து பாரளுமன்றத் தேர்தலை நடத்தினார்கள். முதலாம் அலை இரண்டாம் அலை என அதிகரித்துச் செல்லுகிறது. என இன்று (02.12.2020) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னால் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு. உமா சந்திரா பிரகாஷ் தெரிவித்தார்.
சிறையிலுள்ளவர்கள் அனைவரும் குற்றவாளிகள் இல்லை. வழக்கு இன்னும் தொடரப்பட்டுக் கொண்டிருக்கிறவர்கள், சிறு குற்றங்கள் செய்தவர்கள் பலர் இருக்கின்றனர். சிறிய அறையில் அதிக எண்ணிக்கையானவர்களை அடைத்து அவர்களின் ஐனநாயக ரீதியான உரிமைகளை வழங்க மறுத்துக் கொண்டிருக்குறோமா என்ற கேள்வி இன்று எல்லோர் மனங்களிலும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. சிறு குற்றக் கைதிகள் பினையில் விடுவிக்கக் கேட்டனர்.தமக்கும் கொவிட் 19 தொற்று உள்ளதா என்று பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு வலியுருத்திக் கேட்டனர்.இன்று அவர்களை கொலை செய்து விட்டு புதுக் கதையொன்றை அரசாங்கம் பரப்பிக் கொண்டிருக்கிறது.
இன்று மக்கள் பல் வேறு அச்சத்துடன் வாழ்கிறார்கள் ஒரு பக்கம் கொரேனா இன்னொரு பக்கம் வருமானமின்மை, நாளாந்த வேளைக்கு வெளியே செல்ல முடியாத சுய அச்சம், வீட்டில் இருந்தால் 5000 ரூபா அரசியல் இல்லாமல் வழங்கப்படுமா என்ற கேள்வி, தனிமைப்படைத்தப்பட்டால் 10000 ரூபா பெருமதியான நிவாரனப் பொருட்கள் கிடைக்குமா என்ற கேள்வி சகலரிடமும் இருக்கிறது.
கட்டுப்பாட்டு விலையில் பெருட் கொள்வனவை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் கூறுகிறது. இது முற்றிலும் கட்டுக் கதை. கட்டுப்பாட்டு விலையில் எங்கே வாங்க முடியும்? தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ளவர்களுக்கு சரி இதைக் கொடுக்க வேண்டும். வீட்டுல் இருக்கும் பெண்களுக்குத்தான் இதனால் மிகவும் பாதிப்பு.அவர்களுக்குத்தான் வீட்டின் பொறுப்புள்ளது. 5000 ரூபாவால் குடும்பத்திலுள்ள ஐந்து அங்கத்தவர்களை எவ்வாறு பார்த்துக் கொள்ள முடியும்.எவ்வாறு ஐந்து பேரின் தேவையை நிறைவேற்றலாம்?
சேர் பேய்ல் என்று எல்லோறும் இன்று கூறுகின்றனர். பொருட்கள் இறக்குமதியை அரசாங்கம் தடை செய்துள்ளனர்.உள்நாட்டு உற்ப்பத்தி பேதுமானதாகவுள்ளதா?
சிறு குற்றங்கள் செய்த தென் இலங்கை சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பளித்திருக்கிறார். ஆனால் தமிழ் கைதிகளை விடுவிக்க எந்த நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்க வில்லை. எந்த வித குற்றமும் செய்யாத பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல அரசியல் கைதிகள் நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருக்கின்றனர். அவர்களுக்கான தீர்வு என்ன என்று இந்த அரசாங்கம் இது வரை கூறவில்லை.
அனைவருக்கும் பொதுவான நாடு இது. எல்லா இன மத மக்களும் சுதந்திரமாக வாழ இடம் கொடுக்க வேண்டும். இங்கு வாழும் பேதும் பிரச்சிணை, இறந்தாலும் பிரச்சிணை.இறந்த உடல்களை புதைப்பதற்குக் கூட இந்த அரசாங்கம் நிதி அறவிடுகிறது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை இந்த அரசாங்கம் பின்பற்ற வில்லை. இன மத ரீதியாக மனங்களை புன்படுத்தும் செயற்ப்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.