Our Feeds


Friday, December 4, 2020

www.shortnews.lk

மஹர சிறை மோதலில் ஈடுபட்ட பாதாள குழுவின் இலக்கு ஆயுதக் களஞ்சியசாலை

 



பாதாள குழு உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட அமைதியின்மையே மஹர சிறைச்சாலை மோதலுக்கு காரணம் என மஹர சிறை கண்காணிப்பாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மோதலில் ஈடுபட்டவர்களின் இலக்கு ஆயுதக் களஞ்சியசாலை என கூறிய அவர் அதை பாதுகாக்க சிறைச்சாலை அதிகாரிகள் செயற்பட்ட விதம் தொடர்பிலும் அவர் தெளிவூப்படுத்தினார்.

´இந்த மோதல் சம்பவம் அன்று 4 முதல் 4.30 மணியளவில் இடம்பெற்றது. அந்த நேரத்தில், நாங்கள் சிறைச்சாலையின் ஒவ்வொரு பகுதியையும் திறந்து உணவு வழங்குவோம். ஆயிரம் அல்லது ஆயிரத்த இருநூறு கைதிகள் அப்போது இருந்திருப்பர். உணவு வழங்கிய போது சில கைதிகள் மனக்கிளர்ச்சியுடன் நடந்து கொள்ளத் ஆரம்பித்தனர்.

மற்ற சிறைக்கூடங்களில் இருந்தவர்கள் பூட்டை உடைத்து ஆட்களை ஒன்று சேர்க்க தொடங்கினர், பின்னர் சுமார் 2000 பேர் வரை ஒன்றுக் கூடினர். கடுமையாக நடந்துக்கொண்டவர்கள் கொவிட் கூடங்களை சேர்ந்தவர்கள் அல்லர். போதை பொருள் குற்றச்சாட்டில் உள்ள கடுமையான குற்றவாளிகளே இந்த பிரச்சினையை தோற்றுவித்தனர்.

அவர்களின் இலக்கு ஆயுதக் களஞ்சியமாக இருந்தது, அப்போது நான் மூன்று அதிகாரிகளிடம் ரி 56 ஆயுதங்களைக் கொண்டு மேல் நோக்கி சுடச் சொன்னேன், ஆனால் அப்போதும் அவர்கள் கட்டுப்படவில்லை. மாற்றுவழி இல்லாமையால் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினோம். 7 தோட்டாக்களைப் பயன்படுத்தினோம். அதை அவர்கள் கூட உணரவில்லை.

ஆயத களஞ்சியசாலை உடைக்கப்பட்டிருந்தால், அது பாரிய விளைவை ஏற்படுத்தியிருக்கும். சிறையில் ஐந்து பாதாள உலக குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களை தனிதனியாகவே அடைத்து வைத்துள்ளோம். எனினும் அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்குதல் நடத்திக்கொள்ள ஆரம்பித்தனர். அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முயற்சித்தனர் என மஹர சிறை கண்காணிப்பாளர் ஜகத் வீரசிங்க கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »