Our Feeds


Friday, December 4, 2020

www.shortnews.lk

புரெவி புயலின் மறைமுக தாக்கத்தினால் நாட்டில் பல பாகங்களில் மழையுடன் கூடிய வானிலைக்கு வாய்ப்பு

 



புரெவி சூறாவளி நாட்டிலிருந்து அகன்று சென்றிருந்தாலும் அதன் மறைமுக தாக்கம் காரணமாக இன்று (04) நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


புரெவி சூறாவளியின் மறைமுக தாக்கம் காரணமாக வடக்கு, வட மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மேலும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூpயுள்ளது.

அதன் காரணமாக இன்று வடக்கு கடலில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் திணைக்களம் கேட்டுள்ளது.

புரெவி சூறாவளி வடகிழக்கு கடற்கரை மற்றும் குச்சவேலி வழியாக நேற்று முன்தினம் இரவு இலங்கைக்குள் பிரவேசித்து நேற்று காலை நாட்டை விட்டு விலகி சென்றது.

இந்த சூறாவளி மன்னார், யாழ்ப்பாணம், களிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, கண்டி, மாத்தளை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை தாக்கியதால் சுமார் 44,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

50 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாகவும், 2,148 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும், தற்போது 10,559 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பலத்த மழை காரணமாக வட மாகாணத்தில் சிறிய அணைக்கட்டுக்கள் உடைப்பெடுக்கும் நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வவுனியாவில் உள்ள நெடுகேணி மற்றும் வெலி ஓயா ஆகிய பகுதிகளில் உள்ள அணைகளை பாதுகாக்க பாதுகாப்பு படையினர் மணல் மூட்டைகளை அடுக்கி வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »