பாராளுமன்றத்தில் இது எனது கடைசி நாளாக இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஞன் ராமனாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்தார்.
நீதி மன்ற அவமதிப்பு வழக்கின் விசாரனை இம்மாதம் 8ம் திகதி விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அதன் தீர்ப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகின்றது.
நான் சிறைக்கு செல்லவிருப்பதால் என்னை பேச விடுங்கள் என சபாநாயகரிடம் கேட்டுக் கொண்ட ரஞ்ஞன் ராமனாயக்க எம்.பி அவர்கள் நான் உண்மையை பேசித்தான் சிறை செல்லவிருக்கிறேன். நான் ஊழலில் ஈடுபடவில்லை. வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. எனக்கிருக்கும் ஒரே செய்தி அந்த முன்பக்க பின்பக்க விமர்சனம் மாத்திரம் தான் என அவர் மேலும் கூறினார்.