நேற்று இலங்கையில் மொத்தமாக 669 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதிக தொற்றாளர்கள் - 204 பேர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்புக்கு அடுத்த நிலையில் கம்பஹாவில் 111 பேரும் கண்டியில் 170 பேரும் அடையாளம் காணப்பட்ட நிலையில் கலுத்தரை மாவட்டத்தில் 67 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
கொழும்பில் கொட்டஹென பகுதியிலேயே அதிக தொற்றாளர்கள் - 48 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.