நேற்றைய தினம் பொலன்னறுவை சென்ற “சிங்களே அபி” அமைப்பின் பௌத்த மத குருமார்கள் மாட்டுப் பண்ணையாளர்களின் மாடு வளர்க்கும் தொழுவங்களை அவை தொல்பொருள் தினைக்களத்தின் காணிகளில் அமைந்திருப்பதாக கூறி அவற்றை உடைத்து நொறுக்கினார்கள்.
இந்நிலையில் இன்றைய தினம் பொலன்னறுவையில் மாடு வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் தமது மாடுகளை வீதிக்கு கொண்டு வந்து மாடுகளுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.