மாவனல்லை தெவனகல மலையின் பின்புறமாக வசித்து வரும் முஸ்லிம்களின் இடங்கள் புனித பூமி எல்லைக்குள் வருவதாக கூறி மீண்டும் பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
மாவனல்லையில் அமைந்துள்ள தெவனகல மலையின் பின்புறமாக மாவனல்லையிலிருந்து ஹெம்மாதகம வழியாக கம்பலை செல்லும் பாதையில் அமைந்துள்ள தெவனகல பகுதியில் வசிக்கும் முஸ்லிம்களில் ஒருவர் தனது வீட்டுக்கு முன்னால் அவருடைய சொந்தக் காணியில் மேலதிக கட்டிடப் பணியொன்றை மேற்கொண்ட வேலையில் தெவனகல பௌத்த தேவாலய மத குரு அங்கு வந்து கட்டிடம் கட்டுவதற்கு எதிராக கருத்து வெளியிட்ட வேலை அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் பின்னர் இன்றைய தினம் (02.12.2020) தெவனகல பகுதிக்கு சென்ற பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் “இங்கு யாரும் சண்டியர்கள் இருக்கிறார்களா?” இது தெவனகல புனித பூமிப் பகுதி எனக் குறிப்பிட்டு முஸ்லிம்களை அச்சப்படுத்தும் காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.