இன்றைய நடவடிக்கையை நாம் 💯 சதவீதம் எதிர்பார்க்காவிட்டாலும்...
ஜனாஸா அடக்கம் செய்யும் கோரிக்கைகளை இலங்கை அரசு உதாசீனம் செய்து தொடர்ந்தும் ஜனாஸாக்களை தகனம் செய்துகொண்டிருக்கும் நிலையில்,
அதற்கெதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை (நீதிமன்றம்) தள்ளுபடி செய்வதானது ஜனாஸா தகனம் விடயத்தில் நீதிமன்றமும் அரசுக்கு சார்பாக இருக்கிறது என்பதே அர்த்தம் கொள்ளமுடியும்.
மேன்முறையீடு செய்யமுடியுமா என்பதை வழக்கு தொடர்ந்த நல்லுங்கள் தொடர்ந்து ஆவன செய்வார்கள் என நம்புகிறோம். அவர்களுக்கு அல்லாஹ்! நல்லருள்பாலிப்பானாக!
ஜனாஸா எரிப்பு விடயத்தில் நிர்ப்பந்த நிலை காரணமாக அல்லாஹ்விடத்தில் நாம் குற்றவாளிகளாக இல்லாவிட்டாலும் ஜனநாயக ரீதியில் உரிமைகளை வென்றெடுக்க போராட தளம் (கிரவுண்ட்) இருக்கும்பட்சத்தில் அதனை செய்வதே எமக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நாம் செய்யும் கைங்கரியம்.
இந்த சந்தர்ப்பத்தில் 100 வீதம் நீதிமன்ற இந்த (தள்ளுபடி செய்த) செயல்பாட்டை நாம் எதிர்பார்க்காவிட்டாலும் பாதிக்கப்பட்ட மக்கள் தானாகவே கனகச்சிதமாக காய்நகர்த்த தொடங்கியிருந்தது நல்லதற்கே. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!
பிரேதங்களை எரிப்பதற்கு காசு தரமாட்டோம்! நீயே வைத்துக்கொள்! என்ற சாத்வீக போராட்டம் முன்கூட்டியே பிலான் பண்ணப்பட்ட போராட்டமல்ல என்பதே யதார்த்தம்.
முன் ஏற்பாடுகள் இல்லாத யாரும் தலமை தாங்காத தனிநபர்களின் சாத்வீக போராட்டமாக காலத்தின் தேவைக்கேற்ப இது அமைந்துள்ளதை மறுக்கமுடியாது.
போராட்டங்களுக்கான தேவை அவரவருக்கு வரும்போது அதனை சரியாக புரிந்துகொண்டால் எவ்வளவோ சாதிக்கலாம்.
கவனிக்க :- தொடர்ந்தும் நாம் அனைவரும் இதற்கு முகங்கொடுக்க தயாராக இருப்பதோடு அதனால் ஏற்படக்கூடிய பலவகையான இன்னல்கள், அலைக்கழிப்புகள், பழிவாங்கல்களையும் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும்.
நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தபின்னர் ஜனாஸா எரிப்புக்கு கையொப்பமிடாது பணம்தராது மறுப்பவர்களுக்கு எனன செய்வதென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யோசிக்காமல் இருக்கமாட்டார்கள். எனவே இது இலேசில் முடியாதென்றே எண்ணுகிறேன்.
இருப்பினும் அல்லாஹ்வின் ஏற்பாடுகள் என்னவென்பதை நாம் அறியோம்.
அதேநேரம் "வஹ்ன்" காரணமாக இடைநடுவில் புகுந்து புத்திமதி கூறி கெடுப்பதற்கு யாரும் வராமல் இருந்தால் சரி.
யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைக்கு அஞ்சிக்கொள்ளட்டும்.
ஜனநாயக ரீதியிலான முயற்சியுடன் கூடிய பிரார்த்தனைகள் இன்றியமையாதது.
ஹஸ்பியல்லாஹு வநிஹ்மல் வகீல்.