காத்தான்குடி பொலிஸ்பிரிவில் நேற்று (6) இரு ஆண்கள் திடீரென மரணமடைந்திருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.எல்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.இவ்வாறு உயிரிழந்தவர்கள் 64 மற்றும் 44 வயதான நபர்களாவர்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவானின் அனுமதியின் பேரில் சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்ட்டதாக சிறுகுற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி முஸ்தபா மேலும் தெரிவித்தார்.