கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 628 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 26,038 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 402 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 66 பேரும், களுத்துறை மாவட்டத்தை சேர்ந்த 30 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, கண்டியில் 01 தொற்றாளர்களும் , குருணாகலையில் 04 தொற்றாளர்களும், இரத்தினபுரியில் 35 தொற்றாளர்களும் அம்பாறையில் 14 தொற்றாளர்களும், கேகாலையில் 07 தொற்றாளர்களும் மற்றும் காலியில் 15 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 22,861 ஆக அதிகரித்துள்ளது .
கடந்த 24 மணித்தியாலங்களில் 728 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19,032 ஆக உயர்வடைந்துள்ளது. தொடர்ந்தும் 6,878 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகினறனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான 5பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.