கொரோனா தொற்றாளர்களை அழைத்துச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருதானையிலிருந்து கல்முனை - கதுருவெல பகுதிக்கு 23 கொரோனா தொற்றாளர்களை அழைத்துச்சென்ற பேருந்து, பிரிதொரு பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் பேருந்துகளின் சாரதிகள் இருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு, கொரோனா தொற்றாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.